Wednesday, August 7, 2019

மழையே!


மேகமே, அவள் வருமுன்னே
மெதுவாகப் பெய்.

மழையே, அவள் வந்தபின்னே
மட்டாமல் பெய்.

வருமுன் பெய்யாதே-
வர முடியாமல்
இருந்து விடுவாள்.

வந்ததும் விடாதே -
போக முடியாமல்
இருந்து விடுவாள் .

     

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...