உம்பர் கூட உறக்கம் துறந்தார்
கம்பர் கூட கவிநயம் தேடினார்
அன்பர்ப் பலரும் அறிவை இழந்தார்
இன்பக் காதல் இனிமை தனிதான்!
இருப்பினும்
ஓடிப் பிடித்து காதல் வடித்து
நீடித் திருக்க நின் மதி கொடுத்து
தேடிச் சுகமெனக் கருதுவ தெல்லாம்
வாடிப் போகும் வழக்கம் உணர்ந்து.
❤D❤