Showing posts with label Tamil Poetry. Show all posts
Showing posts with label Tamil Poetry. Show all posts

Tuesday, September 22, 2026

நீயே என் உயிர்

 

உன் பெயர் ஒன்று உதட்டில் விழுந்தது—

உச்சரித்தாலும் அகலவில்லை;

உலகம் முழுதும் மறக்கச் சொன்னாலும்,

உள்ளம் மட்டும் மறக்கவில்லை.


முதலில் உதட்டின் வாசம் நீயே;

மெல்ல மெல்ல நினைவின் தேசம் நீயே;

இன்று என் நெஞ்சின் நிலவும் நீயே—

இமை மூடும் இரவின் ஒளியும் நீயே.


இரவுக்குள் நிலவாய் வந்தாய்,

இதயத்துள் உயிராய் நின்றாய்;

நான் என்று இருந்த என் நெஞ்சை

நீ என்று மாற்றி சென்றாய்.


இப்போது என்னிடம் கேட்பதென்ன?

இதயம் நீ… உயிரும் நீ…

என் மூச்சின் ஓசை நீயே—

என் மௌனப் பாசம் நீயே.


Friday, September 5, 2025

மாட்சி என்ன மாட்சி

மாட்சி என்ன மாட்சி - மனையில் மட்டுமே மாட்சியா?

மறையும் இறையும் கூட செய்கிறதே?


ஆட்சி என்ன ஆட்சி -  நாட்டில் மட்டுமே ஆட்சியா?

காடும் கடலும் கூட காண்கிறதே?


காட்சி என்ன காட்சி- கண்களால் மட்டுமே காட்சியா?

மனதின் ஓட்டத்தை என் சொல்ல?


சாட்சி என்ன சாட்சி – நா வன்மை மட்டுமே சாட்சியா?

மனதின் தர்மத்தை என் செய்ய?

 

வாழ்க்கை எனும் பயணம்

 வாழ்க்கை சொல்லும் கதையெல்லாம் நாளை மறந்திடுமே, வாழ்ந்த தடங்கள் நாமில்லாமல் மண்ணில் மறைந்திடுமே! கல்லாய் கால்கள் கனத்தாலும்  நின்று விடாதே, ...