உறக்கம் துறந்தேன் உன் நினைவிலே
மறக்க முயன்றே தோற்றேன்
நானாகவே நானில்லையே
வான் மீதிலே நிலவில்லையே
என் கண்களில் அம் முழுமதி
உன் வரவு என் மன நிம்மதி
பறக்கத் துடிக்கும் என் இதயமே
பாவை உந்தன் கண்ணின் பாஷையில்
மறக்க அடிக்கும் என் சித்தத்தை
பூவை உந்தன் மெய்யின் வாசனை
விருந்து உண்ணும் என் எண்ணமே
கோதை உந்தன் பிம்பம் கற்பனையில்
மருந்து போலே உன் நினைவுகள்
காதை பல கூறும் உன் நயனம்
❤D❤
The Song version, modified from above
உறக்கம் துறந்தேன் உன் நினைவிலே
மறக்க முயன்றே தோற்றேன்
நானாகவே நானில்லையே
வான் மீதிலே நிலவில்லையே
என் கண்களில் அந்த நிலவு
உன் வரவு என் மன நிம்மதி.
பறக்கத் துடிக்கும் என் இதயமே
பாவை உந்தன் கண்ணின் பாஷையில்
மனதை இழந்தேன் நொடிப் பொழுதிலே
பூவை உந்தன் மெய்யின் வாசனை
விருந்து உண்ணும் என் எண்ணமே
கோதை உந்தன் இன்ப நினைவிலே
மருந்து போலே உன் நினைவுகள்
காதை பல கூறும் உன் நயனம்
❤D❤