Wednesday, December 17, 2014

பார்த்திடக் கண் கோடியில்லை



கடைக்கண் பார்வைக்காக
காத்திருந்த நாட்களுண்டு
காத்திருந்த கால்களுக்கு
பார்த்திடக் கண் கோடியில்லை
.
இன்னல் பல போக்கிடவே
இதயத்தில் மருகியதுண்டு
இதயத்தின் தெய்வம் உன்னை
இழந்தபின் இனிமை இல்லை
.
பகலவன் உனைப் போற்றிடவே
பாக்கள் பல புனைந்ததுண்டு
பாக்கள் பல பிறந்திருப்பினும்
போற்றிடச் சொல் போதவில்லை
.
ஆசி பெற அன்றாடம் நான்
ஆயிரம் தெய்வம் ஆராதிப்பதுண்டு
ஆயிரம் தெய்வமும் ஒன்று கூடினும்
ஆசான் உனகக் கீடுயிணை இல்லை

D

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...