கருநீலக் கழுத்தே உன்
கருணைக்குச் சாட்சி.
மறை நான்கின் அடிமுடியாய்ப்
பறைவாய் வழு நெறியை.
பெரு நடனம் புரிந்தே இத்
தரணியை நீ காப்பாய்.
இருவர் இலை, நீயே தான்
திருமாலாய்த் தெரிவாய்.
பிறவா வரம் தருவாய்
எம திறைவா இனி நீயே.
பிறவும் நீ அருவம் நீ
மருவா குணங்கொண்டாய்.
திருவாதிரை ஒரு வாய்க்களி
பெறுவாய் நட ராசா.
வருவாய், வந்தருள்வாய்
என் சிவகாமியின் நேசா.