Tuesday, December 29, 2020

நட ராசா

கருநீலக் கழுத்தே உன்

கருணைக்குச் சாட்சி.

மறை நான்கின் அடிமுடியாய்ப்

பறைவாய் வழு நெறியை.


பெரு நடனம் புரிந்தே இத்

தரணியை நீ காப்பாய்.

இருவர் இலை, நீயே தான்

திருமாலாய்த் தெரிவாய்.


பிறவா வரம் தருவாய்

எம திறைவா இனி நீயே.

பிறவும் நீ அருவம் நீ

மருவா குணங்கொண்டாய். 


திருவாதிரை ஒரு வாய்க்களி

பெறுவாய் நட ராசா.

வருவாய், வந்தருள்வாய்

என் சிவகாமியின் நேசா.   

No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...