குயவர் பட்டறையில் ஒரு
குழந்தை உருவெடுத்தது .
கன்னி அவள் மனமே அவர்களின்
களிமண் பாண்டம்.
கனிவும் அறனும் குயவியின்
கருவிகளாயின.
வேளை இலா தியாகமோ குயவனின்
சூளைகள் ஆயின .
பாடு பல பட்டு இருவரும்
பாண்டம் என்னைப்
படைத்தனர்.
மூப்பு காலத்தில் நான்
முத்தாய்ப்பாய் அவர்க்கு.