Saturday, September 4, 2021

ஆசான்கள்

 

குயவர் பட்டறையில் ஒரு  

குழந்தை உருவெடுத்தது .

கன்னி அவள் மனமே அவர்களின் 

களிமண் பாண்டம்.


கனிவும் அறனும் குயவியின் 

கருவிகளாயின.


வேளை இலா தியாகமோ குயவனின்

சூளைகள் ஆயின .   


பாடு பல பட்டு இருவரும் 

பாண்டம் என்னைப் 

படைத்தனர்.


மூப்பு காலத்தில் நான் 

முத்தாய்ப்பாய் அவர்க்கு.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...