என் தாய் அன்று
நிமலன் எனக்கு பூமியில்
நிலாச் சோறு
நித்தமும்
ஊட்டியுள்ளாள்.
என் சேய் இன்று
தன் மகளுக்கு
நிலாவிலேயே
சோறு ஊட்டுகிறாள்.
==================
நாயகியின் வதனத்தை
நிலவோடு ஒப்பிட்ட
நம் கம்பன்களுக்கு
அவ்வதனத்தில்
கால் வைத்தால்
கோபம் வராதா?
==============
வெகு
விரைவில்
சந்திர மண்டல
வாசிகள்
பூமி கிரகணத்தைக்
கண்டு பிடிப்பர்.
===============
சந்திர திசையின்
நிலவரம் அறிய
நிலவுக்கே
வந்துள்ளார்
சோதிடர்.
===============
சங்கடஹர
சதுர்த்தி விரதம், இன்று.
இங்கிருந்து நான்
பூமியைக் கண்டபின்தான்
புசிப்பேன்.
===============