Saturday, November 15, 2014

எனக்கெனப் பிறந்தவள் நீ

எனக்கெனப் பிறந்தவள் நீ, அடியே
இன்னும் எனை ஆட்கொள்வதில்
தாமதம் ஏன்.

பாவையுந்தன் கூந்தல் வாசனை வாட்டுதே
பாவையின் கூந்தலில் தொலைந்திட வேண்டும்
இனி என்ன தயக்கத் தடை, அடியே.

தேவையுந்தன் கண்ணின் கனிவான பார்வை
தேவை கண்பார்வையில் குளிர்ந்திட வேண்டும்
இனி என்ன விரக நிலை, அடியே.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...