கம்ப ராமாயணத்தில் ஒரு சீன்.
ஒரு நாள், நிறைந்த மனதுடன் தசரதன் கண்ணாடிமுன் நின்று தன்னையே அளந்தான். அப்போது , அவன் கர்ணமூலத்தில் ( "கிருதா") , ஒரே ஒரு நரை முடி இருப்பதைக் கண்டான். அந்நாளில் எல்லாம் மூப்பு எய்திய பின் தான் முடி நரைப்பது என்பது வழக்கம்.
இச்சமபவத்தை கவிச்சக்கரவர்த்தி கம்பன் என்ன அருமையாக வர்ணிக்கிறான், பாருங்கள்.
தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
அதாவது, இராவணன் செய்த பாவங்கள் எல்லாம் சேர்ந்து தயரதன் கர்ணமூலத்தில் நரைமுடியாய் முளைத்தது , என கம்பன் வர்ணிக்கிறான் .
ஏன் இந்த உவமை? இப்போது பார்ப்போம்.
அந்த நரைமுடியைப் பார்த்தவுடன் தனக்கு வயதாகி விட்டதாகவும், இராமனுக்கு முடி சூட்டும் தருணம் வந்துவிட்டதாகவும் கருதினான். உடனே, முடி சூட்டு விழா ஏற்பாடாகி, கூனியினால் தடை பட்டு , இராமன் கானகம் செல்ல நேரிட்டு, சீதை இராவணனால் அபகரிக்கப்பட்டு, போரின் முடிவில், இராவணன் வதமாகிறான். எனவே, இராவண வதத்திற்கு நரை முடியே காரணம் என கம்பனின் கற்பனை. என்னே அற்புதம்!
இதை இப்போது ஏன் சொல்லுகிறேன்?
2019க்கு வருவோம்! ப. சிதம்பரம் கைதிற்கு ஒரு வண்டி ஓட்டுனரின் மதுவே காரணம் ஆகி விட்டது! நம்புவீர்களா? எப்படி?
Peter Mukherjee, Indrani Mukherjee தம்பதியரின் car driver, ஒரு நாள் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டி போலீஸிடம் மாட்டிக்கொள்ள, விசாரணையில், Peter Mukherjee, Indrani Mukherjee இருவரையும் ஒரு கொலையில் சம்பந்தப் படுத்தி விட, அந்தக் கொலை விசாரணையில் பணம் புரளுவதாக தெரிய வர, அதற்கும் கார்த்தி மற்றும் ப சிதம்பரம் இருவருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ என சந்தேகித்து , அது தீவிர விசாரணையாக மாறி , முடிவில் கைது! (தொலைக்காட்சி செய்திகளிலிருந்து நான் புரிந்து கொண்டது இதுதான்).
இது உண்மையா, இல்லையா என்பது வழக்கு விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும். அது வரை, " innocent, until proven otherwise" என்றே எடுத்துக்கொள்வோமாக!!
-D-
No comments:
Post a Comment