Friday, December 22, 2023

வைகுண்டம் காணீர்

விரதம் பகலில்  விதிப்படி இருந்து

இரவில் அறவே உறக்கம் துறந்து

திருமால் நாமம் திருவடி ஜபித்து

இருபா லாரும் இறையடி நினைப்போம்.


முராசுரனை முறியடிக்க முகுந்தன் அவனோ

பிராட்டி கரங்கொண்டு பணிந்திட வைத்துப் 

பெறாமல் பெற்ற பிரம்மனும் பார்த்திட 

வராமல் வந்தே வாழ்வித் தானே. 

 

பாற்கடற் பள்ளி பரந்தாமன்  ஏகாதசி 

ஓர் தினம் இன்றும் ஒய்யாரச் சயனித்து 

சோர்ந்த சீவனுக்குச் சொர்க்க வாசலூடே

மார்பில் இலக்குமி மிளிரிடக் காணீர்.

-திலீப்





No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...