எனக்குத் தெரிந்த அளவில், சங்க காலம் தொடக்கம், இன்று வரை , மாறாமல், மருவாமல் நம்முடனேயே பயணப்பட்டு வந்துள்ள ஒரே வாத்தியம் நாதஸ்வரம் மட்டுமே!
*************************************
அன்றைய இசையுலகில் மிகவும் பிரசித்தி பெற்ற நாதஸ்வர கலைஞர்கள்
நாதஸ்வரத்தில் திருவாடுதுரை ராஜரத்னம்பிள்ளை மற்றும் காரைக்குரிச்சி, இருவரும் ஜாம்பவான்கள்.
மற்றொருவர்்நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் .
திருவாரூர் தெப்பம் மற்றும் தேர் திருவிழா வருடம் தோரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும். அந்நேரம் பல வித்துவான்கள் கச்சேரி செய்ய கேட்டிருக்கிறேன், சிறு வயதில்.
இதில் விசேஷம் என்னவென்றால், அக்காலத்தில் மைக் வசதி அதிகம் கிடையாது. மேலும், ஊர் மிகவும் அமைதியாக இருக்கும், பொதுவாக. எங்கள் வீடு கச்சேரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் இருக்கும்.
இவர்கள் வாசிக்கும் கம்பீரம், 1.5 கி.மீ. தள்ளி இருக்கும் வீட்டில் மைக் இல்லாமலேயே கேட்கும்!! அப்படியொரு வாசிப்பு.
இதில் , தவிலின் பங்கைச் சொல்லியே ஆகா வேண்டும்.
வலங்கைமான் ஷண்முகசுந்தரம், ஹரித்வாரமங்கலம் பழனிவேல் ,திருவலப்புதூர் கலியமூர்த்தி, மற்றும் வலையப்பட்டி போன்ற ஜாம்பவான்கள் வளம் வந்த காலம், அது .
மதுரை சேதுராமன் பொன்னுசாமி , எனக்கு மிகவும் பிடித்தவர்கள் . சிறு வயதிலிருந்தே அவர்களை பார்த்து, கேட்டு வளர்ந்தேன் , மதுரையில்.
மீனாட்சி அம்மன் கோவிலில் இவர்களைக் காணலாம். வெளியூர் கச்சேரி இல்லாத நாட்களில் , ஆடி வீதியில் அவர்கள் இருவரும், ரெட்டைத் தவில் சகிதம் உலா வந்தவண்ணம் தங்களை மறந்து வாசித்துக் கேட்டுள்ளேன். அவர்களுக்கு பணம் முக்கியம் இல்லை. மீனாட்சி அம்மன் மேல் உள்ள பக்தியும், இசைமேல் தீராக் காதலும் தான். வாசித்துக்கொண்டே ஆதி வீதியை வலம் வருவர். தேவ கானம் என்றால் அதுதான்.
பிற்காலங்களில் Leucoderma தாக்கி, மற்றும் பல உடல் உபாதைகள் தாக்கியும் சேதுராமன் மிகவும் துன்புற்றார். ஆயினும், மீனாட்சி தாயார் மீதான பாசம் இம்மியளவும் குறைவில்லை. ஒருவேளை அவரது கடைசி மூச்சுக்கூட நாதஸ்வரம் வாயிலாகத்தான் போனதோ என்னோவோ.
நாதஸ்வரத்தில் இன்னொருவரை தமிழகம் மறந்தே விட்டது . அவர் தான் ஷேக் சின்ன மௌலானா சாஹிப். திருச்சியில் தையல் கடை வைத்திருந்தவர். ஆனால் , ஆந்திராவைச் சேர்ந்த இசை குடும்பம் அவருடையது. 300 வருட இசைப் பாரம்பரியத்தை தன தோள்களில் தாங்கியவர். அவருடைய தேவகாந்தாரி மற்றும் ஹம்சநாதம் ராகம் வாசிப்பு வாழ்க்கையில் மறக்க முடியாது. அவரது மகன் மீர் காசிம் இப்போதும் வாசிக்கிறார்.
ரெட்டை நாயனமும், ரெட்டைத் தவிலும் ஈடு இணையற்றவை.
தமிழ் நாட்டின் மிகப் பெரிய சொத்து நம் நாதஸ்வரமும் தவிலும் .
**************************************
காலம் மாறித்தான் விட்டது. இன்றைய திருமணங்களில், வடக்கத்திய Sangeeth, Mehendi, Baarat போன்ற சடங்குகள் புகுந்துள்ளன. அதில் தவறில்லைதான். காலத்துக்கேற்ப நம்மையம் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். அனால், collateral damage இதில் நாதஸ்வரம்தான் .
நாதஸ்வர கலைஞர்களுக்கு மன்னர் ஆட்சி காலத்திற்குப்பின் இரண்டே வருமான வழிகள் தான். ஒன்று சபா, மற்றும் கோவில் கச்சேரிகள். இரண்டு, திருமணங்களில் வாசிப்பது. இன்று இரண்டடுக்குமே வழியின்றி நாதஸ்வர, தவில் கலைஞர்கள் தவிக்கின்றனர்.
தமிழர்களான நாமே நாதஸ்வரத்தை நாதம் இல்லாமல் ஆக்கி விட்டோம் இன்று.

1 comment:
அந்த காலத்திற்கே போனது போன்ற உணர்வு ! அருமையான பதிவு !!
Post a Comment