Friday, June 27, 2025

கம்பனுக்கு முன்பே இராம காதை!!

கம்ப இராமாயணத்தில் , இராமனின் அழகை வர்ணிக்கிறான் கம்பன்.  


வெய்யோன் ஒளி, தன் மேனியின்

   விரிசோதியின் மறைய

பொய்யோ எனும் இடையாளொடும்

   இளையானொடும் போனான்

மையோ மரகதமோ மறி

   கடலோ மழை முகிலோ

ஐயோ இவன் வடிவென்பதோர்

   அழியா அழகுடையான்!


இராமனின் மேனியின் ஒளி, வெய்யோன்/கதிரவனின் ஒளியையே  மறைத்துவிடும் அளவிற்கு மிளிர்கிறதாம்;

இடை இல்லையோ என்றெண்ணுகின்ற அளவில் சிற்றிடையாளான சீதையோடும், தனக்கு இளையவனான இலக்குவனோடும் நடந்து செல்கிறான் இராமன்; 

மையோ, மரகதமோ, கரையிலே வந்தடிக்கிற கடலோ, மழை முகிலோ.. என்பவர்.. இதற்குமேல் உருவகங்களே இல்லை என்னிடத்தில் என்று நெகிழ்ந்தவராக ஐயோ .. இதற்குமேல் என்ன சொல்வது.. இவன் அழியாத அழகுடைய வடிவைக் கொண்டவன் என்று வியக்கிறார்.



கம்பனுக்கு முன்பே பலர் இராமாயணத்தைத் தொட்டுள்ளணர். 

 

இரண்டு உதாரணங்கள் கீழே : 



மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே

திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே


இந்தப் பாடல் 9ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆச்சியர்க் குறவை அதிகாரத்தில் (சிலப்பதிகாரம்) சொல்லப்பட்டு இருக்கிறது. 


இன்னும் தொன்மையான எடுத்துக்காட்டு வேண்டுமா? இதோ!


கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு


இது சங்க இலக்கியமான புறனானூற்றில் சொல்லப் பட்டு உள்ளது!!

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...