Monday, July 29, 2013

கவிஞனின் ஜீவநதி


ஒர்நிலையும் நிலைத்திராமல்
மனவுளைச்சல் வாட்டிவிடும்
நேர்மதியோ வேலைசெய்து
நின்றுபல நாளிருக்கும்.

உடைத்துணரும் பகுத்தறிவும்
உண்டோ என வியக்கவைக்கும்
மடைதிறந்த வெள்ளமென
மனப்புனலில் நீர்ச்சொரியும்

மையலுக்குக்  கோயில்கட்ட
ஆகமமோ அடுத்துவரும்
அய்யனவன் அருளுக்காக
பாக்கள்பல எடுத்துத்தரும்

உலகமிதை மடமையென
ஒதுக்கிவிடத் துணிந்துவிடும்
உலகமொதுக்கிய மையலெனைக்
கவிஞனாக  ஆக்கிவிடும்
❣D❣

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...