Friday, August 22, 2014

நிலையாமை


உம்பர் கூட உறக்கம் துறந்தார்
கம்பர் கூட கவிநயம் தேடினார்
அன்பர்ப் பலரும் அறிவை இழந்தார்
இன்பக் காதல் இனிமை தனிதான்!

இருப்பினும்

ஓடிப் பிடித்து காதல் வடித்து
நீடித் திருக்க நின் மதி கொடுத்து
தேடிச் சுகமெனக் கருதுவ தெல்லாம்
வாடிப் போகும் வழக்கம் உணர்ந்து.

❤D

Thursday, August 14, 2014

பிறவி

புல்லாய்ப் பூணாய் பிறவிப் பெறினும்
கல்லாப் புல்லர்க்கும் கனிவாய் ஈவேன்
எல்லாப் பிறப்பும் இறைவன் படைப்பே
அல்லால் பிறவி வீணே !

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...