Saturday, March 12, 2016

கன்னியின் காதல்

Confession of a woman in love

ஒரு கன்னியின் கதைப்பு
==================

தோகை மயிலே நேரில் வரினும்
மோக வலையில் விழேனென்று
ஆக மட்டும் அடம் பிடித்தேன்
பாகனுக் கடங்கா யானை போல.

அறுதி யாய் என் வாழ்வினிலே
சுருதி கூட்டச் சுரமாய் வந்தாய்.
உறுதி எல்லாம் கரைந்தது
பரிதி முன்னே பனி போல.



No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...