Saturday, August 3, 2013

சங்க காலம்

நாமின்று
இருப்பதும்
சங்க காலமே!

வங்கிகளின் முதற்பணத்தை
வகையருக்கவொரு
"முதற்ச்"சங்கம்.


நடிகையின் ரசிகர்கள்
இட்டதொரு
"இடைச்"சங்கம்

வியாபாரிகள்
ஒன்று சேர்ந்து
கட்டுவித்ததோ
"கடைச்"சங்கம்!

ஆம்! நாம்
இன்றிருப்பதும்
"சங்க" காலமே!
❣D❣

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...