Thursday, October 1, 2026

வாழ்க்கை எனும் பயணம்

 வாழ்க்கை சொல்லும் கதையெல்லாம் நாளை மறந்திடுமே,

வாழ்ந்த தடங்கள் நாமில்லாமல் மண்ணில் மறைந்திடுமே!


கல்லாய் கால்கள் கனத்தாலும்  நின்று விடாதே,

காலம் செல்லும் பாதையெல்லாம் தோழன் ஆகுமே!


சின்னச் சின்ன மின்மினிகள் இரவில் விளக்காக,

சிந்தை கொண்டால் இருட்டெல்லாம் விடியல் ஆகுமே!


சூரியனைத் தேடும் விழிகள் சோர்ந்து போனாலும்

செல்லாத பாதை நடந்தாலே உலகம் தொடருமே!


வாழ்க்கை என்னோடு வாழ்ந்திடுமா வாழ்நாள் முழுதும்

வானம் மாறும், காலம் மாறும் வாழ்வும் நகருமே!


நீயே ஏற்றி வைத்த தீயை நீயே அணைப்பாயா?

நெருப்பை நெஞ்சில் வளர்த்துவிட்டால் நெஞ்சே சுடுமே!


கசப்பும் கொஞ்சம் கலந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்

கனிந்து போனால் தேனும் கூட திகட்டிப் போகுமே!


एक गिलास में

कुछ दूर तक तो चाँद भी चलता रहा मेरे साथ

फिर खो गया वो जाने किस अजनबी एहसास में


तेरी ख़बर न आई तो दिल ने यही कहा

शायद तू आज भी है किसी और के पास में


हर शाम एक ख़्वाब को सीने से रख लिया

हर रात बुझती आग रही अपनी ही प्यास में


दुनिया ने हमको लाख दिए रिश्तों के लिबास

हम ढूँढ़ते रहे तुझे अपने ही उदास में


अब कौन पूछता है कि क्या खोया, क्या मिला

सब कुछ समा गया है मेरे एक गिलास में


मनन, ये ज़िंदगी भी अजब शाम हो गई

डूबा हुआ है आदमी अपने ही विश्वास में

--Dilip

ஏங்கும் நெஞ்சம் பாடுதே

இதழ் தொட்டு, இதயம் தொட்டு,

இன்பக் காற்றாய் நீ வந்தாய்;

நினைவில் நின்று, நெஞ்சில் நின்று,

நீங்கா நாதம் நீ ஆனாய்.


கூந்தல் கோதி, காதல் பேசி,

கூடும் நேரம் தேடுதே;

இன்னும் இன்னும் வேண்டும் என்று

ஏங்கும் நெஞ்சம் பாடுதே.


கேட்கக் கேட்க காதல் தீரா,

கேள்வி மட்டும் ஓயாதே;

தரத் தரத் தேனும் தீரா—

தாகம் மட்டும் தீராதே.


அன்பே, அன்பே, என்னை விட்டு

அலைந்து போகாதே;

நீ எனக்கு, நான் உனக்கு—

இதைத் தவிர வேறேது? 

வாழ்க்கை எனும் பயணம்

 வாழ்க்கை சொல்லும் கதையெல்லாம் நாளை மறந்திடுமே, வாழ்ந்த தடங்கள் நாமில்லாமல் மண்ணில் மறைந்திடுமே! கல்லாய் கால்கள் கனத்தாலும்  நின்று விடாதே, ...