Sunday, July 6, 2025

கரை தேடும் நதி

 கரை தேடும் நதி போலே என் நெஞ்சம்,

கரையாச் சுமையில் காணும் வஞ்சம்.

மருந்தான நேரம் காயமாய்ப் போனதே,

மலராத காலம் மாயமாய் மறையுதே.


மின்னல் போலே கனவுகள் பிளந்தன,

இன்னல் பேணவே இரவைத் துளைத்தன.

மரக் கிளையோ  கலங்குது தூறலில்,

மனமோ மருகுது சோகச் சாரலில் .


இரத்தம் போல நேரம் இழைகிறது,

இருட் சுவடு நெஞ்சில் விழைகிறது.

கரை தேடும் நதி போலே என் உள்ளம்,

கவிதை எழுதும் கண்ணீரின் வெள்ளம்.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...