பாரிச வாயுவினால் பாதிக்கப் பட்ட ஒருவரின் வரிகள்
கைத்தசை வீழ்ந்த பிறகு
கிண்ணங்கள் கொஞ்சம் உயர்ந்தன...
நான் மட்டும் சற்று தாழ்ந்தேன்.
மெல்ல நழுவும் தண்ணீர்,
மேசை மேல் காட்டும் ஓட்டம்...
நான் தூக்க எத்தனித்தும்
தாங்க வராது என் கை.
மடங்காத முழங்கை
தடுமாறும் தண்ணீருடன் சேர்ந்து
தடுமாறும் என் உணர்ச்சியும்.
சிரிக்கிறேன் மெல்ல ...
சிதறும் கிண்ணம் கூட என்
சின்ன வெற்றியாகச்
சிரிக்கிறது இன்று.
உண்மையை சொல்லவேண்டுமானால் —
நான் தினமும் தூக்கி வைக்கும் அது
ஒரு கிண்ணமல்ல,
ஒர் உலகம்.
No comments:
Post a Comment