முகத்தில் தூசிகள் நின்றன சுமையாய்,
முனைந்து கண்ணாடி துடைத்தேன்!
என் மங்கிய வதனம் பார்த்தேன்,
எதிரியாய் கண்ணாடி கண்டேன்!
உணர்ந்த பின் தான் உருக்கம் வருகின்றது,
உறங்கும் உண்மை விழிக்கிறது.
என் தவறே என் பார்வையின் பிழை;
தூசியில் இல்லை, என் பார்வையில் மழை!
No comments:
Post a Comment