Thursday, October 1, 2026

வாழ்க்கை எனும் பயணம்

 வாழ்க்கை சொல்லும் கதையெல்லாம் நாளை மறந்திடுமே,

வாழ்ந்த தடங்கள் நாமில்லாமல் மண்ணில் மறைந்திடுமே!


கல்லாய் கால்கள் கனத்தாலும்  நின்று விடாதே,

காலம் செல்லும் பாதையெல்லாம் தோழன் ஆகுமே!


சின்னச் சின்ன மின்மினிகள் இரவில் விளக்காக,

சிந்தை கொண்டால் இருட்டெல்லாம் விடியல் ஆகுமே!


சூரியனைத் தேடும் விழிகள் சோர்ந்து போனாலும்

செல்லாத பாதை நடந்தாலே உலகம் தொடருமே!


வாழ்க்கை என்னோடு வாழ்ந்திடுமா வாழ்நாள் முழுதும்

வானம் மாறும், காலம் மாறும் வாழ்வும் நகருமே!


நீயே ஏற்றி வைத்த தீயை நீயே அணைப்பாயா?

நெருப்பை நெஞ்சில் வளர்த்துவிட்டால் நெஞ்சே சுடுமே!


கசப்பும் கொஞ்சம் கலந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்

கனிந்து போனால் தேனும் கூட திகட்டிப் போகுமே!


No comments:

வாழ்க்கை எனும் பயணம்

 வாழ்க்கை சொல்லும் கதையெல்லாம் நாளை மறந்திடுமே, வாழ்ந்த தடங்கள் நாமில்லாமல் மண்ணில் மறைந்திடுமே! கல்லாய் கால்கள் கனத்தாலும்  நின்று விடாதே, ...