Friday, September 5, 2025

மாட்சி என்ன மாட்சி

மாட்சி என்ன மாட்சி - மனையில் மட்டுமே மாட்சியா?

மறையும் இறையும் கூட செய்கிறதே?


ஆட்சி என்ன ஆட்சி -  நாட்டில் மட்டுமே ஆட்சியா?

காடும் கடலும் கூட காண்கிறதே?


காட்சி என்ன காட்சி- கண்களால் மட்டுமே காட்சியா?

மனதின் ஓட்டத்தை என் சொல்ல?


சாட்சி என்ன சாட்சி – நா வன்மை மட்டுமே சாட்சியா?

மனதின் தர்மத்தை என் செய்ய?

 

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...