Sunday, June 18, 2023

ஐந்திணைக்கூழ்

பஞ்சாமிர்தம் என்பது வடமொழிச் சொல்லாகும். பஞ்சம் என்றால் ஐந்து. அமிர்தம் என்றால் "சாவில் இருந்து காக்கும் பொருள்" எனப் பரவலாக கருதப்படுவதாகும். இந்த வார்த்தைக்கு உன்னொரு உள்ளர்த்தமும் உள்ளது. 

தன்வந்திரி என்னும் தேவதைக்கு (கடவுள்)  அமிர்தம் என இன்னொரு பெயரும் உண்டு. இவர் மிகவும் பலவீனமான (நோயாலும் மற்றும் களைப்பிலும்) மக்களுக்கு புத்துயிரும் புதுப் பொலிவும் தருபவர். 

இன்று கிடைக்கும் பஞ்சாமிர்தம் பல வகைளில் கிடைக்கின்றது. அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்பது இடத்தைப் பொறுத்ததாகும். உதாரணத்திற்கு, இன்றும் ஒடிஷாவில் கிடைக்கும் பஞ்சமிர்தம் பால், தயிர், தேன், நெய் மற்றும் கங்கைநீர் கொண்டு செய்யப்படுகின்றது. பண்டை கால்ப் பழக்கம் ஆதலால் அந்தந்தப் பிரதேசத்தில் என்னென்ன வஸ்துக்கள் பொதுவாகக் கிடைக்கிறனவோ அவைகளைக்கொண்டே செய்வது என்பது நடைமுறை வழக்கத்தில் இருந்து உள்ளது எனத் தெரிகிறது.

தமிழ் நாட்டில் பஞ்சமிர்தம் என்பது முருகனுக்கு உகந்த அபிஷேகப் பொருள் ஆகும். அது என்ன முருகனுக்கு விசேஷம்? சற்று ஆராய்வோம். 

தமிழகத்தில் ஷண்முகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாகக் கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே. ஆனாலும், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணிகை, பழமுதிர் சோலை என்பவையே இந்த ஆறு தலங்கள் ஆகும். 

அவ்வை சொன்னபடி, "குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் ஆகும்".  இது வெறும் வாய்ப் பேச்சா , அல்லது இதன் பின் ஏதேனும் சித்தாந்தம் உள்ளதா? எதற்காகச் சரவணன் மலையில் உறைகிறான்? 

முருகன் அழகன்; வீரத்தின் சின்னம் ஆவான். கந்த புராணம் படித்தவர்களுக்குத் தெரியும். மூவுலகும் ஒரு காலத்தில் தாரகாசுரன், சூரபத்மன் மற்றும் சிங்க முகாசுரன் எனும் மூன்று கொடிய அரக்கர்கள் பிடியில் சிக்கித் தவித்த வேளையில்,  இம்மூவரையும் அழித்து உலகைக் காத்தவன். இவர்களை அழிக்க சாம , தான பேதம் மூன்றையும் முதலில் பயன் படுத்தி, அவை பயன் அற்று போகவே இறுதியாக, தண்டம் (பலம்) கொண்டு அவர்களை அழித்து உலகை உய்வித்தவன். அவர்களுடன் கடும் போர் மூண்டது. தந் பலத்தை எல்லாம் கொண்டே இறுதியில் வென்றான் வேலவன். 

கந்த புராணத்தில் வரும் மூன்று அரக்கர்களும் வேறு எங்கும் இல்லை. நம் ஒவ்வருவர் உள்ளேயும் உள்ள பல வேண்டத்தகாத குணங்களில் மூன்று - ஆணவம், கண்மம் மற்றும் மாயையே இம்மூன்று தீய குணங்கள் ஆகும். அகத்தில்  இவற்றை வெல்ல ஆத்ம பலம் அதிகம் தேவை. புறத்தில் , இவ்வசுரங்களை அழிக்க பலம் அதிகம் தேவை எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே முருகனுக்கும் பலத்திற்கும் அதிக சம்பந்தம் உண்டு. 

பஞ்சாமிர்தம் நலிந்த ஒருவனுக்கு பலம் அளிக்கும் பொருள் ஆகும். எப்படி? பார்க்கலாம் இப்போது, தமிழனின் சாதுர்த்தியத்தை. 

சங்கத் தமிழில் நிலப்பரைப்பை (திணை) ஐந்தாகப் பிரித்து உள்ளனர் சான்றோர். பஞ்சாமிர்தத்திற்கு ஒவ்வொரு திணையிலிருந்தும் ஒரு பொருள் சேர்க்கப் படுகிறது . அவை கீழ்க்கண்டவாறு :


குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும் - தேன் 

முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும் - நாட்டுச் சர்க்கரை (கரும்பு)

மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும் - வாழை

நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும் - தென்னை 

பாலை - முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற‌ நிலம் - பேரீச்சம் பழம் 

இவை ஐந்தும் கெடாமல் பேண (பசு) நெய் 


இன்றைய பஞ்சாமிர்தத்தில் பொதுவாகத் தேங்காய் இருப்பதில்லையே என யோசிக்கலாம். மேற்படி  முறை பண்டை முறையாகும். எப்போது மருவியது எனச் சரியாகத் தெரியவில்லை. 

சரி, முருகனுக்கு மட்டும் என் இந்த பஞ்சமிர்த்தப் பிரசாதம்? அந்த காலத்தில் இன்று போல் பஸ் மற்றும் இரயில் எல்லாம் கிடையாது. முருகனை தரிசிக்க பல மைல்கள் காவடி ஏந்தி நடந்தே செல்லுவது வழக்கம். அது மட்டும் அல்ல. மலை ஏறித்தான் மால் மருகனை தரிசிக்க வேண்டும் ( திருச்செந்தூர் தவிர்த்து).   வழியில் ஹோட்டல்கள் கிடையாது. நடக்கவோ தெம்பு வேண்டும். high calorie instant energy food தேவையாய் இருந்தது. கண்டு பிடித்தான் பஞ்சாமிர்தத்தை. களைத்த யாத்திரீகனுக்கு பலம் சேர்த்து, புதுப் பொலிவைத் தரும் இந்த பஞ்சாமிர்தத்தை 3000 வருங்களுக்கு முன்பே, nutritionist என்று எவரும் உருவாகாத காலத்திலேயே , மனித சக்திக்கு வழி வகுக்கும் உணவாக நன்றே அடையாளம் கண்டவன் தமிழன். பஞ்சாமிர்தம் சுமார் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பாலை என்பது தமிழகத்தின் பக்கத்தில் இல்லவே இல்லை. என்றால்,  பேரீச்சம் பற்றி எங்கணம் அறிந்தான்? கோழிக்கோடு துறை முகம் வழியாக அரபு நாடுகளுடன் வாணிபம் நடத்தியுள்ளான் பண்டைத் தமிழன். இதற்கு சங்க இலக்கியங்களில் சான்று உள்ளது. 

இது எல்லாம் சரி. அது என்ன ஐந்திணைக்கூழ்? தமிழில் கூழ் என்றால் neither solid nor liquid state food என்று அர்த்தம். பஞ்சமிர்தத்தின் பதத்தை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். புரியும். ஐந்து திணை மூலப்பொருள் கொண்டு செய்யப்படும் இந்த தமிழனின் wonder energy food க்கு பண்டை தமிழ்ப் பெயர் ஐந்திணைக்கூழ்.  











 

  



   


 


Sunday, June 4, 2023

மகரந்தத் தேன்

 


மகரந்தத்  தேன் எடுக்க இதழ் விரித்து நா தீண்ட - உன் 

மதன தேன் உண்டு  மாளவில்லையடி ரதியே.

 மரத் தேன் அறுசுவை என்றேன் உனைப் புணரும் முன்

மறந் தேன் எனையே உன் சொர்க வாசலிலே.

Monday, May 22, 2023

உந்தன் உயிரால் நிரப்பிவிடு.

 

படுக்கையில் பதமாய்ப் படர்ந்து விடு 

கனிவாய்த் என்னைக் கவர்ந்து இழு.

எச்சில் மாற்றி உண்டு விடு - பின் 

உடைக்கு மெதுவாய் விடை கொடு

உன்னையே எனக்கு உடுத்தி விடு

வியர்வை மழையில் பயிரை இடு.

எந்தன் உயிரை உறிஞ்சி எடு

உந்தன் உயிரால் நிரப்பி விடு.


Wednesday, May 17, 2023

இரு கை வேடத்து இராகவனின் நாமம்

 

இரு கை  வேடத்து இராகவனின் நாமம்

இரு க்கையில்  எங்கும்  இனியதோர் கீதம்.

இரு கை கூப்பி இதயம் நெகிழ்ந்து நான்

இரு மாப்பெலாம் இட அவனின்  பாதம்.


உலக வாழ்க்கை எளிதாய் உய்வித்திடும் நாமம்

அலகிலாப் பிழைகளையும்  அழித்திடும் நாமம்

புல னைந்தையுமே புடம் போட்டிடும் நாமம்

கல னாதிபனின்றும் எமைக் காத்திடும் நாமம்.   


நாக்கின் நுனியில் நித்தம் நாரணன் திருமொழி 

காக்கின் வரும், கனகமும் காணியும் நம் வழி 

நோக்கின், நொடியில் மலையும் மடுவாய் மாறிவிடும்

கோர்கின், உடலும் உள்ளமும் இராம நாமத்துடனே. 


உமை யவளுக்கும் கூட உவகை அளித்த நாமம்

நமை ஆட்கொண்ட வன்மீகனின் மோகம்

தமை  சூழ் பாவமனைத்தும்  தகர்த்திடும் வேகம்    

இமைப் பொழுதில் கிடைத்திடும் மோட்ச போகம்.  


மதனின் பாணத்தையும் உடைத்திடும் நாமம்

அதனின் அழகால் அமிழ்த்திடும் நாமம்

பதமாய்ப் பாவம் அனைத்தையும் எறித்து - பல  

விதமாய் பலன் தரும் பகவனின் நாமம் .


ஆயக் காலைகள் அனைத்திற்கும் ஆசான்

தீயத் தாடகையைத் தீர்த்திட்ட தீர்க்கன் 

மாயை ஆறும் மனம் அண்ட விடாது காக்கும்

தூயவன் அவனின் தொழு நாமம் கொண்டு.



இரு கை  வேடத்து- கைகள் இரண்டிலும் யானை பலம் கொண்ட; கலனாதிபன் - யம தர்மராஜன்; வன்மீகன் - வால்மீகி முனிவர்; மாயை ஆறு - காம, குரோத,லோப, மோஹ, மத, மார்சர்யம். 





 

 

Tuesday, May 16, 2023

தடியடி தாளத் திராணியோ இல்லை

தடியடி தாளத் திராணியோ இல்லை,

கன விரைவில் வந் தெனைக் காத்திடுவாய்.


பலரும் பயனுற பணி பல புரிந்தேன்

பயம் ஏன் பரமா, பலம் நீ தருவாய். 


விரயம் இல்லா திரவிய திரட்டு

இறையன் புடனே இனிதே புரிந்தேன்.  


சாட்டை அடி இனி சகிக்கா தையா

சாகேத ராமா! அபயம் அளிப்பாய்.


உள்ளம் உருகிட உன்னுடன் உய்ந்தேன்

எள்ளளவும் இனி கவலை இல்லை.


பார்திவி மீட்டிட பாலம் அமைத்தாய்

பார் புகழ் நாதா, பார், கடைக் கண்ணால். 


எப்பொழுதும் உன் நாமம் நாவினில், 

செப்படி வித்தை செய்திட வாராய்!

தப்படியில் ஒரு தாயை உயிர்த்தாய்

அப்படியே வந் தெனை ஆட்கொள்வாய்.


Note: This poem (originally in Telugu) was penned by Bhadrachalam Ramadasu, when he was jailed for supposedly pilfering government tax money ( belonging to the Sultans) and diverting them to building temples for Rama. He was chained, flogged and put to unending torture. He believed that he only used the money, rightfully, for the right causes.  

 

உய்ந்தேன் - வாழ்ந்தேன் ; எள்ளளவும் - சிறிதும்; பார்திவி - சீதா பிராட்டிக்கு மற்றோரு பெயர்; செப்படி- magic; தப்படி- காலடி அளவு; தப்படியில் ஒரு தாயை உயிர்த்தாய் - அகலிகை மோட்சம்; இராமன் அவளை தாயாக பாவித்தான் 

Monday, May 15, 2023

கஞ்சரளத்தைக் காணாய்.

கோதாக் கரையில் கொலு வீற்றிருக்கும் 

குகனின் தமையன் குணக்குன்றவனே 

புந்தியில் சுமக்கும் புண்ணிய பூமியாம் 

கஞ்சரளத்தைக் காணாய்.


மைத்திலியும் அவள் மைத்துனனுடனும்

மாருதியம் பல வானர சேனையும்

புடைசூழ் அருளும் புருஷோத் தமனின்  

கஞ்சரளத்தைக் காணாய்.


சங்குடனே தவச் சக்கரம்  சேர்ந்திட  

திருவிளை யுடனே தரிசனம் தந்திடும்  

ஒப்பிலி அப்பனின் ஒளிரும் தலமாம்  

கஞ்சரளத்தைக் காணாய்.


பிரமிக்கமிகு மதிலும் பிராகாரங்களும் 

வியக்க வைத்திடும் விண்ணுயர் விமானமும்

கதவும் கொண்ட கரிய செம்மலின்   

கஞ்சரளத்தைக் காணாய்.


புன்னை வனமும் பொலிவைக் கூட்டிட

கிருட்டினக் கிரீடமும் கீர்த்தியைப் பாடிட 

துளசிக் கொத்தே தூரிகை ஆகிய -இராம 

கஞ்சரளத்தைக் காணாய். 


கலி  காலத்தின்  நில வைகுண்டம்,

பொலி வுடன் திகழும் புருஷோத் தமனை

விழுந்து வணங்கிட வெண்டனே வாராய் -

கஞ்சரளத்தைக் காணாய். 

 

தஞ்சம் புகுந்தாரைத் தாங்கிப் பிடித்திடும் 

இராம தாசனை இனிதே  இரட்சித்திடும்

தயரதன் மகன் இவன் தரிசனம் தந்திடும் -

கஞ்சரளத்தைக் காணாய். 



 



Saturday, May 13, 2023

எல்லாம் இராமன் மயம்

எல்லாம் இராமன் மயம் - இவ் 

உலகே உத்தமன் மயம்.


என்னுள் உறைபவன் எங்கும் பரவி

அண்டத்தையம்  ஆட்டி வைத்திட , 


எல்லாம் இராமன் மயம்.


ஆதவனும் ஆதிரையும் 

வையகமும் வான் வெளியும் 

பால் நிலவும் பாதாள உலகமும்  

நாரணன் மகன் நான்முக னுட்பட,  


 எல்லாம் இராமன் மயம்.


அரணும் அதனின் ஆறு பலவும்

குறிஞ்சியும் பின் குறு நெய்தலும்  

விலங்கினமும் வித்திட்ட கடமையும் 

நான் மறையும் நாலா யிரமும் 


எல்லாம் இராமன் மயம்.


திக்கெட்டும் தீராக் காலமும்

பரமனின் பாம்புப் படுக்கையும் 

அறவே விடத்தகு ஆறு குணமும் 

வசுக்கள் எட்டு வசம்பட நானும் 


எல்லாம் இராமன் மயம்.


தீரன் இராமதாசன் முன்வைத்த அவா 

தீர்ந்தன எல்லாமும், தீர்த்தக் கரையினிலே.   

 தாரக மந்திரம் தன்னுள் தக்கிட  

பிறவிப் பிணியோ பிறகும் வரா.


எல்லாம் இராமன் மயம்.

எல்லாம் இராமன் மயம்.


உத்தமன் - another name for Rama

ஆதிரையும் - tiruvathiraiyum ( denotes all Stars here, as well as Shiva)

 நாரணன் - Narayanan

நான்முகன் - Lord Brahma

அரண்  - Forest

குறிஞ்சி - Hills 

குறு நெய்தலும் - relatively small sandy beach

வித்திட்ட கடமை - ordained duty;

நான் மறை - Vedas

நாலா யிரமும் - 4000 Divya Prabhandams

திக்கெட்டும் - 8 dorections

தீராக் காலமும் - endless time

பரமனின் பாம்புப் படுக்கை - Adi Seshan

ஆறு குணம் - Kama, Krodha, lobha, moha, matha mathsalya

வசுக்கள் எட்டு வசம்பட நானும் - I am governed by the 8 vasus

வாழ்க்கை எனும் பயணம்

 வாழ்க்கை சொல்லும் கதையெல்லாம் நாளை மறந்திடுமே, வாழ்ந்த தடங்கள் நாமில்லாமல் மண்ணில் மறைந்திடுமே! கல்லாய் கால்கள் கனத்தாலும்  நின்று விடாதே, ...