Monday, December 31, 2012





இந்த வாசகம் ஒன்று  facebook இல் கண்டேன். ஒரு நிமிடம் யோசித்தேன். பெயரில் மாறினால் மட்டும் நம் தமிழ்த்தாய் குதூகலிப்பாளா? தமிழ்த்தாய்க்கு பெயரில்தான் பங்கமா? கீழே என் சொந்த கருத்து, இதனைப்பற்றி.. புதுக்கவிதை  வடிவில்.


===============================================


பண்பாடு பெயரில் இருந்துதான் வருமா?
மொழிப்பற்று பெயரில் தானா?

சீர்குலைக்கும் தொலைக்காட்சி
மஞ்சள் நிறத்தில் இன்றைய பத்திரிக்கை

சரித்திரம் அறியாச் சிறுவர்
பொங்கலை மறந்த பெண்டீர்

வீரத்தைத் துறந்த இளைஞர்
விவேகதைத் தொலைத்த பெரியவர்

இவர் எல்லாம் இன்றைய
தமிழ்க் காவலர் என்றால்

தமிழ்த் தாயே!
அபாயம்! அபயம்!!

No comments:

இது தமிழ் மண்ணில் எந்நாளும் மலரும் ஒரு நினைவு.

 இது தமிழ் மண்ணில் எந்நாளும் மலரும்  ஒரு நினைவு.  சுமார் எண்ணுறு ஆண்டுகளுக்கு முன், கொல்லிடம் ஆற்றங்கரையில் வாழ்ந்தோர் அங்கிருந்த பெருமாளின்...