Wednesday, November 11, 2015

Two Taml poems on rain

I have created two poems in Tamil, based on rain theme. Both use the same props - the thunder, water splashing, winds gushing, the toads etc..
One is romantic, optimistic. The coming together with the sweetheart. The other is of pathos, sadness. Separation of the souls. The second poem uses slightly more classical words than the first
=========
The joyous
மழைக் காலமிது உன் நினைவு வருகுது
சாரலின் சத்தத்தில் உன் குரல் ஒலிக்குது
இடி இடிக்கும்போது படபடப்புக் கூடுது
ஒவ்வொரு துடிப்பிலும் உன் குரல் ஒலிக்குது
வீசிடும் வாடைக்காற்றில் நெஞ்சமும் பறக்குது
ஆடிடும் மரமோ பச்சைக்கொடி காட்டுது
தேரையோ நம் கல்யாண வேதம் ஓதுது
மழைக் காலமிது உன் நினைவு வருகுது
=========
The sombre
இருட்டுவது வானமா, இல்லை என் மனமா?
உருட்டுவது இடியா இல்லை என் இதயமா?
வாடைக் காற்றினிலே பறக்குது காதல் வாசம்
“போகல்” என மரம் மறித்தும் போகிறாய் தூர தேசம்.
நான் அழ, வானம் அழ, கீற்று அழ, ஆவும் அழ
அறையிலும் மனதிலும் வேகமாய் இருட்டு சூழ
மையலின் மரணத்திற்க்கு தேரையின் தேம்பல்
மறுமுறைதான் பூக்குமோ நம் காதல் ஆம்பல்?
==========
heart emoticon D heart emoticon

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...