Sunday, January 6, 2019

முழுவொளி தோற்றம்

ஓடிப் படித்தேன் உலகியல் உணர
நீடித்திருக்கும் எனவே நினைத்தேன்
தேடிச் சுகமென கிட்டிய தெல்லாம்
வாடிப் போனது வழக்கில், கேளாய்.


பாடிய நான்மறை பலன்தர வில்லை
ஓடிய மனமோ ஓரிடத்தில் இல்லை 
நாடினேன் மௌனம் நாதா உன்னிட்டு
மூடிய விழிக்குள் முழுவொளி தோற்றம்!!     

1 comment:

Unknown said...

Beautifully written

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...