Friday, June 12, 2020

உள்ளன

உன் வாய் எனை நிந்தித்தாலும்
கண்களில் காதை பல உள்ளன. 

என் வரிகளின் அங்க அடையாளம்
இன்றும் உன் மூச்சில் உள்ளன.

என்றோ என்னை நீ நிராகரித்த
நிமிடங்கள் நினைவில் உள்ளன.

இன்றும் உன் மாளிகை வாசலில்
என் காலடித் தடங்கள் உள்ளன.

பூட்டிய கோவில் மதில் சுவற்றில்
செதுக்கிய நம் பெயர்கள் உள்ளன.

வாட்டியது போதும், திரும்பி வா
எஞ்சிய நாட்கள் சிலவே உள்ளன.

Dilip








No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...