Sunday, January 14, 2024

பொங்கலோ பொங்கல்!!


ஒற்றை மண் அடுப்பில் அலங்கரித்து 

ஒய்யாரமாய்ப் பானை அமர்ந்திருக்க

உற்ற நேரம் வந்ததும் விறகை 

பற்ற வைக்க பாவை காத்திருக்க


கற்றைக் கரும்பில் கண் பதிந்திருக்க

உற்றார் வரவில் ஊரே குதூகலிக்க

ஒற்றைக் குலவையில் ஊர்மாதர் லயித்திருக்க

பகலவனை சேவித்துப் படைத்தோம் பொங்கலை.


எழுப்பிடப் போட்டி, சேவலுக்கும் செம்மறிக்கும்

புத்தாடைப் போட்டி, தாதைக்கும் தமக்கைக்கும்

கவர்ந்திடப் போட்டி, காளைக்கும் கன்னிக்கும் 

பொங்கிடப் போட்டி, பானைக்கும் மனதுக்கும்!


பொங்கலோ பொங்கல்!!


-திலீப்     

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...