Saturday, May 3, 2025

குஷ்பு


காணும் விழியில் கரையுது நெஞ்சம்,

பாணி மிகுந்த பரிமள வாசம்,

மாணிக்கக் காயம் மயக்கும் நடை,

பூங்கொன்றை சாயல் புரட்டும் நகை.


சங்கதி யெல்லாம் சினிமா அழகு,

அங்க மெல்லாமோ அதீத அழகு ,

தங்க மேனியின் தகிப்பொரு அழகு -அவள் 

சிங்கார கீதமோ சொல்லுக் கழகு .


திருச்சியில் சிலரோ திருக்கோவில் எழுப்ப,

திரு மேனி பேரில் வேள்வி நடத்திட,

குடமுழுக்கு கண்ட குஷ்புவே  - நீ 

இடம் கொண்டாய் இராமன் இதயத்தில் (!!)



No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...