Monday, May 5, 2025

தர்மமெனும் சூதாட்டம்

 





தர்மபுதிரே! தர்மபுத்திரரே! நீயே 

தர்மம் என்றே

தலைமுறைகள் சொன்னதல்லவா?

அதனால் வந்தா உனக்குச் சூதாட்ட ஆசை?

அரசனிடமிருந்து 

அகன்றதேன் ஆசாரம்?


அன்பு சகோதரர்கள் ஐவரையும்

அமையா வெறும் நாணயமாய் வைத்தாய்!

திருமதி உரிமையைக் 

தெருக்கூத்தாக்கி வைத்தாய்,

அதை யாரிடம்தான் 

அனுமதி கேட்டாய்?



நடு அரங்கில் அன்று 

நாணயம் மட்டும் போகவில்லை – 

நாணமும்  போனது!

சகுனியின் சொற்கள் வலைவீசியதும்

சதிக்குள் விழுந்தது தர்மமே-  தருமன் அல்ல!


நம்பி ஆடினான் நம்பி - அதில் 

உயிரே பந்தயமென

தோற்கும் தருணத்தில் தான் 

உணர்ந்தான்.


தருமம் தோற்கும்போது தான்

தார்மீகமே  தோல்விக்குள்ளாகிறது- அதைப் 

பாதுகாக்க வேண்டியவனே

பிணக்கும்போது

பிணமாகிறது மாட்சிமை.


சகுனிகள் பலராயிருக்கிறார்கள் இன்று,

தர்மர்கள் தாமே தவறுகிறார்கள் இன்று - ஆனால் 

சூதை சூட்சுமமாய் வென்று 

தருமம் நிற்கும் தொன்று !




Madras Tamil Style!!


டார்லிங் தர்மா!


நீதான் தருமோன்னு

நீட்டி மொயக்கிநானுவ. 

பொறவு 

இன்னாத்துக்கு நாய்னா உனுகு ஜூது?


வூட்ல கீற தம்பிங்களையும் 

வூட்டுகார அம்மாவையும்


 ஜூதுல வெச்சியே - பட்டா 

ஜோட்டாலயே அடிக்க வாணாம் ஒன்ன?


பொறம்போக்கு சகுனி வேல ரிப்பீட்டு - அங்க

புட்டுக்கிச்சு- தருமமொம் அப்பீட்டு  !


ஜல்ஸாக்கு ஆட ஆரம்பிச்ச நீ.
ஆனா ஆட்டத்துல உன் 

அண்ட்ரவேறே   பந்தயம்னு சில்லேறி 


தோக்குற நேரம்தான் 

தெரிஞ்சுச்சாக்கும்? 


ஜூதுனா ஷோக்கா

இருக்கலாம் வாத்யாரே! ஆனா


உனுகு தேவ

உடான்ஸு இல்ல! "பொத்திக்கினு போ! பொறவால வா!"ந்னு ராமேஞ்சொன்னது

ராவணனுக்கு இல்லடா சொண்ட்டி! உனுக்கு தான்!!



No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...