மழை பெய்ய, மண் நெகிழ,
மக்கள் கண்ணீர் மல்கினால் –
வருவர் வேகமாய் – வீரரவர்!
மழலை (கிணற்றில்) விழ, நாடு நெளிய,
மண் நடுங்கயிலே வருவர் - தேவரவர்!
நிழல் போலே நாடு காப்போர்,
நிஜம் போலே நின்றிடுவோர் –
நித்தம் உயிரைபி பணயம் வைக்க
சித்தம் கொண்டு சென்றிடுவோர்.
போர் வந்தால், போர் புரிவர்,
"போது" என்றால், பாய்ந்து செல்வர்,
படைக்கு ஆவியை அப்பணித்தோர்க்கு –
புகழாரம் கூட கூடாதோ ?
ரிப்பன் வெட்ட – நடிகர் வருவர், (அ)
ரங்கம் ஏற – அரசர் வருவர்,
ரத்தம் சிந்தும் வீரனுக்கோ - இங்கு
ராகம் பாட ஆளில்லை!
இனியும் விழா என்றால் –
வீரனையே அழைக்க வேண்டும்!
இனியும் வாழ்த்து என்றால் – அவன்
நெஞ்சையே நிறைக்க வேண்டும்!
போர் மேடை கண்டவனுக்கே இனி
ஊர் மேடை யை உய்விப்போம்!
புகழ் மேடை உச்சியிலே - அவனை
தூக்கிவிட்டு அழகு பார்ப்போம் !
No comments:
Post a Comment