Thursday, May 23, 2013

இசையருள் தா இறைவா



எட்டு திக்கையும் இசையால் போர்த்திவிட்டு
மௌனமாய் நீ முருவலிக்கின்றாய்
பேதலித்து நான் பார்க்கின்றேன்

உன் இசை ஒளியால் ஜகமே ஜொலிக்கிறது
உன் இசைவால் கடலும் கவிஞனாகிறது
பாயும் உன் இசைப் பிரவாகமோ
பிணிப் பாறைகளைத் தாண்டிப்
பரவசப் படுத்துகிறது

உன் இசையில் இணைய
என் இதயம் ஏங்குகிறது
கோஷ்டி கானத்தில் சேர்ந்திடவோ
குரல் வராமல் தவிக்கிறது

பக்தன் படும் பாட்டினைத்தான்
பார்த்து மனம் இரங்காயோ?
கடலளவு இசையிலிருந்து
கடுகளவு தாராயோ?

இசையும் நீயும் ஒன்றல்லவோ?
நானும் நீயும் ஒன்றே அல்லவோ?
என்னில் எங்கே என்னுள் இசை?
எம்பெரு மானின் இயக்க விசை?

♥D♥

No comments:

இது தமிழ் மண்ணில் எந்நாளும் மலரும் ஒரு நினைவு.

 இது தமிழ் மண்ணில் எந்நாளும் மலரும்  ஒரு நினைவு.  சுமார் எண்ணுறு ஆண்டுகளுக்கு முன், கொல்லிடம் ஆற்றங்கரையில் வாழ்ந்தோர் அங்கிருந்த பெருமாளின்...