இத்தாய் மண்ணின் மைந்தன் ஆயினும்
சத்தாய்ச் சாய்ந்தாய் பணத்தின் தோளில்
மத்தாய் ஆகியே வெண்ணை திரட்ட
முத்தாய்ப் பொன்றை முன்மொழின் திட்டாய்
எத்தாய் உன்னை உய்வித் தாளோ
பித்தாய்த் திரிந்தாய் பதராய்ப் போனாய்
முத்தாய்க் கிட்டிய மானிடப் பிறவி
வெத்தாய் வெஃகல் அழிக்க விட்டாய்
கொத்தாய் அறுத்தாய் குறுவை அதனில்
சொத்தாய்ச் சேர்த்தாய்ச் சொந்தம் புகழ
செத்தாய் உரமாய் ஆனாய் விதைக்கு.
❣D❣
வெஃகல் = Greed, avarice
No comments:
Post a Comment