Saturday, April 19, 2014

நம்பிக்கை

விழியில் தெரியும்  பிம்பமெல்லாம்
பித்தன் எனக்குப் பிடிக்கவில்லை
மொழியில் தெரியும் அழகெல்லாம்
சித்தம்  கிறங்க ரசிக்கவில்லை

வழியின் மீதென் விழிவண்டோ
தேடித் தளரத் தவறவில்லை
பழியாய் உன்னை பார்க்கத்தான்
ஓடியும் எந்தப் பயனுமில்லை

வருவாய் என்னும் நம்பிக்கையோ
சிறிதும் சிதைந்துப் போகவில்லை
தருவாய் திகட்டா இன்பமெல்லாம்-
பிரிவைப் போற்றிப் பயனுமில்லை


No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...