Tuesday, October 14, 2014

எது அழகு?


பாவை அவள் சூட்டிக்கொள்ளும் பூச்சரமே அழகா?

சேவை யதில் உயிர்த் துறக்கும் வீரனவன் அழகா?
ஆவை அதன் கன்று தான் பாலப் பருகும் அழகா?
ஆசையுடன் கன்றுதனை நக்கும் தாய் அழகா?

மாது அவள் இதழைவிட மாதுளை தான் அழகா?

ஏது எனத் தேடவைக்கும் இடையில்தான் அழகா?
தீது எனத் தெரிந்துமே புகைத்தல் தான் அழகா?
காதுக்குத் தேனாக கனிச்சொல்தான் அழகா?

மழலை அது தவழ்ந்து வரும் தருணமே அழகா?
உழவன் அவன் வேர்வையது மின்னும்போ தழகா?
குழலின் இசை குழையச்செய்யும் கண்ணன்தான் அழகா?
அழகன் அவன் தாழை விட வேறேதும் அழகா?
❤D

No comments:

How can India aspire to be a thought-leader?

Two seemly disjointed happenings triggered this article today.  One – I was walking down an old alley here in Singapore, where a signage in ...