Sunday, March 15, 2015

பொங்கும் என் இதயமா?


கார்முகிலும் காற்றும்தான்  கைகோர்துத் திரியும்
பார் எங்கும் பற்பலக் பண்களைப் பாடிடும்
அழகியுன்னைப் பற்றி நான் கேட்டுவிட்டாலோ
அழுதுவிடும் அக்கணமே அழகுச் மழையாக.

ஆழ்கடலும் நீலவானும் அதிகாலைக் கூடிடும்
சூழ்நிலையோ  உன்னையே சுத்தமாக மறக்கடிக்கும்
பாழ்மனதில் உன் நினைவு அலைமோதும் போதெல்லாம்
தாழ்நினைவுச் சிதறல்கள் நுரையுடனே கடற்கரையில்.

மார்கழி மாதத்து அதிகாலை வேளைதனில்
ஊருக்கு முன்னாலே துயிலெழுந்து நீயோ
தெருக்கோடி தரிசனம் தருகையிலே உவகை -
ஆதவனின் உதயமா, இலை, பொங்கும் என் இதயமா?
D




No comments:

Tariff-trums

I woke up to the US Supreme Court gutting the Trump tariffs. Frankly, the odds were always 50–50. Now that the hammer has dropped, here are ...