Monday, July 1, 2019

மணியடித்தது தீன் திரையரங்கு

கோட்டையூர் ஸ்டேஷனில் மனக்
கோட்டை கட்டிக் காத்திருந்தேன்
வீட்டை விட்டு வந்து வெகுநேரம்; ஆயினும்
ஆட்டைத் தவிர வேறு ஆள் இல்லை.

கடந்த சில நாட்கள்;
நடந்த பல நிகழ்வுகள்
மடை திறந்த வெள்ளம் போல 
உடைந்த பல கனவுகள்.

கண்டனுர் புதுவயல் வரை
மிதிவண்டியில் மிதந்து சென்றது
தீன் திரையரங்கில்
"அஞ்சல் பெட்டி 501"
ஆசை தீர பார்த்து மகிழ்ந்தது.

இரவின் மடியில் மொட்டை மாடியில்
பறவை போல் கூட்டுறவு கண்டது
உறவை மறந்து தூக்கம் துறந்து
உரக்கக் கத்தி விளையாடியது .

அக்காலை வேளையில் அவசரமாய்
செக்காலைப் பயணம்- சின்ன வேலை!
எக்காரணமும் இன்றி டவுன் சென்று
முக்கால்வாசி பணமும் காலி!

மணியடித்தது தீன் திரையரங்கு
பணி முடிந்தது என நினைப்பு; பார்த்தால்
மணியடித்தது ஸ்டேஷன் மாஸ்டர்
இனி வரும் இனிய பயணம்     
  
  
 
  

   

No comments:

The World Series

I don't know how many of you had watched the World Series match last night, between KKR and King's Punjab. I did, fully, to the last...