Monday, July 1, 2019

மணி அடித்துவிட்டது

ஆழ் உறக்கம்
அதிகாலை வேளை; இதோ
ஆலய மணி அடித்துவிட்டது.

ஓதி அலுத்துவிட்டது
ஒடத் தயாராய்; இதோ
பள்ளி மணி அடித்துவிட்டது.

கைதிகளின் ஊடே
கைகலப்பு நிறுத்தம்; இதோ
மாமியார் வீட்டு
மணி அடித்துவிட்டது.

திவான் பகதூர்
திவால்;  இதோ
ஏல மணி அடித்துவிட்டது.

பங்கு சந்தையில்
பணம் பண்ணியாயிற்று; இதோ
சந்தி மணி அடித்துவிட்டது.

அந்திம காலத்தின்
அங்கலாய்ப்புகள்; இதோ
மரணத்தின் மணி அடித்துவிட்டது. 



   

   

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...