Wednesday, July 31, 2019

தமிழிசையில் காதல்

கண்ணன் பாட்டில் இல்லாத சிருங்கார ரசம் வேறு எங்கும் உண்டோ?
கோபிகையர் கண்ணனுடன் கூடிக் குலவும்போது பொங்கி வராத காதல் ரசம் வேறு எங்கும் வரப்போவது இல்லை. ஆண்டாளின் திருப்பாவையில் இல்லாத காதலா?

ஒரு விஷயம். தமிழர்கள் கடவுளிலும் காதலைக் கண்டனர். காதலிலும் கடவுளையே கண்டனர்.

இன்னொரு விஷயம். ஹிந்துஸ்தானி முறை இசைக்கும் கர்நாடக இசைக்கும் சரித்திர ரீதியாகப்  பார்த்தால் பல வேறுபாடுகள். அதில் முக்கியமானது, இவ்விரு இசைகளும் எங்கு அதிகமாகப் போற்றிப் பேணப் பட்டன என்பது.
மாறுதல்கள் பல வந்தன, வடக்கில் . ஹிந்துஸ்தானி முறை இசை முகலாய தாக்கத்தில் தத்தளித்தது. மன்னர் பலர் மாண்டனர். சுல்த்தான்கள் தயவில் இசைக்கலைஞர்கள். பாடல்களின் பரிமாணங்களும் மாறின. உடலளாவிய காதலுக்கு முக்கியத்துவம் அதிகமாயிற்று. கடந்த 400 வருடமாக, பல வடக்கத்திய gharana என்று சொல்லக்கூடிய இசைப் பரம்பரைகள் குருமன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. Kotta என்று உருது மொழியில் சொல்லப்பட்ட விலைமாதுக்கள் வசிக்குமிடமே அவ்விசைக்கும் புகலிடமாயிற்று.   விலைமாதுக்களின் விரகம் விவகாரமாய் இசையிலும் புகுந்தது. இதை நான் சரியன்றோ தவறென்றோ கூறவில்லை. சரித்திரத்தைச் சுட்டிக்காட்டினேன் அவ்வளவுதான்.

விந்திய மலைக்குத் தெற்கில் இந்த பிரச்சனை வரவில்லை. அதனால் கர்நாடக இசையில் பக்தியின் தாக்கமே அதிகம்.  இது சினிமாவின் தாக்கம் வரும் வரை. சினிமாவின் தாக்கத்தால் இன்று பக்தியைத் தவிர மற்ற எல்லா ரசமும் பழ ரசம் போலப் பெருகி வருகிறது.

தமிழ் இலக்கியத்தில் பக்தி தவிரவும் பல்வேறு ரசங்களும் விரிவாக அலசப்பட்டு விட்டன. தமிழில் இல்லாத ரசமே இல்லை என தைரியமாகக் கூறலாம்.

ஆனால், அந்தப் பாடல்களுக்கு இசை வடிவம் கொடுக்கும்போது பக்தி மட்டுமே பிரதானமாக வெளிப்படுத்தப்பட்டது. இதற்கும் ஒரு கலாச்சாரக்க் காரணம் உண்டு. இசை என்பது எல்லோருக்கும் பொதுவானது. பொதுவிடங்களில் பாடப்பட்டும், போற்றப்பட்டும் வந்தது. அவ்வாறு பாடப்படும்போது சில ரசங்கள் மட்டுமே பாடத்தகுந்ததாகக் கருதப்பட்டன. எல்லார் முன்னிலையிலும் காதலைப் பாடுவது எனக்குத் தெரிந்தவரை அக்கால கலாசாரத்தில் ஏற்புடையதாக இல்லை என்பது என் கருத்து. அதனால்தான் பக்திக்கும், வீரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  







No comments:

The World Series

I don't know how many of you had watched the World Series match last night, between KKR and King's Punjab. I did, fully, to the last...