ஜெய் ஆஞ்சநேயா!
அஞ்சனை மைந்தா, நீயன்றோ அறிவிற்ச் சிறந்தோன்!
தஞ்சம் புகுந்த வீடணனைத் தரம் கண்டாய், நொடியில்.
ஆற்றலுக்கு வேறேதும் உவமையே வேண்டாம்- நீ
ஆற்றைக் கடப்பதுபோல கடல் கடந்ததாய் எளிதில்.
கல்வி அறிவும் நிறைவும் ஓன்றே கலந்த காட்சி நீ
பல்வித நெறியை பார்வையால் புகுத்திடுவாய் மனதில்.
பக்தியைக் கொண்டு மனத்தினை சலனமறக் கற்பித்தாய்
எத்திசையில் இன்னல் வரினும் சாந்தம் உன் முகத்தில்.
உன் உந்துதலில் உலவட்டும் இராமநாமம், உதட்டில்
தன்னடக்கச் செம்மலால் தவழும் அமைதி, அகத்தில் .
No comments:
Post a Comment