Friday, February 17, 2023

பஞ்சாட்சரம்

உன் அருளால் இந்தக் காயமும் ஒரு நாள் சாம்பல் ஆகும்

பின், சாம்பலும் உயிர்த்து அங்கு ஒரு நாள் ஆம்பல் பூக்கும்.


நிதமாய்  அமைதி ஏனோ நிலைக்காததனால்

உதவாக் கனவெனும் உலகில் திளைக்கும்.


பதமாய்ப் பரம்பொருள் நாமம் பால் ஈர்க்கும் - ஒரு 

விதமாய் இச் சீவனின் வினை பல தோற்க்கும். 

      

யான் எனும் அகந்தையை உன் நாமம் போக்கும் 

நான்மறையில் நான் மறைய என்னுள் பெருந் தாக்கம்.


உன் திருவடி நிழலில் இருந்திட ஏனோ தீராத ஏக்கம் 

என் ஈசனின்  பஞ்சாட்சரம் ஒன்றே பிறவிப்பிணி நீக்கும்.


 பஞ்சாட்சரம் : ந-மச்-சி-வா-ய   


No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...