Friday, October 11, 2013

என்னவளே

அதரங்களின் சிவப்பழகை அள்ளிக் கொள்ளவோ?
உதிரம் சிந்தாமல் உனை எனதாக்கிக் கொள்ளவோ?
பஞ்சணையில் புரளுகின்றேன் தூக்கம் நீக்கி
வஞ்சியையே தலையணையாய் ஆக்கிக் கொள்ளவோ?

கடைக்கண் பார்வையால் சைகை காட்டிவிடு
மடைதிறந்த வெள்ளத்தை மனத்தில் பாய்ச்சிவிடு
உடைக்கத் துணிந்தேன் உலகின் தடைகளை
படைப்போம் புதுப்பண் பார்வையால் ஆணையிடு

என்னுடன் இருந்துவிடு மையல் உய்யட்டும்
பொன்னுடன் மேனியும் ஜொலித்துப் போகட்டும்
பாரா முகமாய் எனை வாட்டிட வேண்டாம் 
தேரா உயிரோ துளிர்விட்டுப் விட்டுப் போகட்டும்






No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...