Sunday, July 6, 2025

கரை தேடும் நதி

 கரை தேடும் நதி போலே என் நெஞ்சம்,

கரையாச் சுமையில் காணும் வஞ்சம்.

மருந்தான நேரம் காயமாய்ப் போனதே,

மலராத காலம் மாயமாய் மறையுதே.


மின்னல் போலே கனவுகள் பிளந்தன,

இன்னல் பேணவே இரவைத் துளைத்தன.

மரக் கிளையோ  கலங்குது தூறலில்,

மனமோ மருகுது சோகச் சாரலில் .


இரத்தம் போல நேரம் இழைகிறது,

இருட் சுவடு நெஞ்சில் விழைகிறது.

கரை தேடும் நதி போலே என் உள்ளம்,

கவிதை எழுதும் கண்ணீரின் வெள்ளம்.

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...