Thursday, December 26, 2013

வாழ்க்கையில் குறிக்கோள்

உணவகத்தில் நுழைந்திட்டேன்
ஊணருந்தி   ஓய்வெடுக்க
"பசிக்கு எதைப் புசித்திடலாம்?"
பட்சணப் பட்டியல் பார்த்திட்டேன்

பார்த்ததெல்லாம் ரசிக்கவில்லை
ரசித்ததெல்லாம் காணவில்லை
ருசிக்கவொரு  பண்டமிதில்
விசித்திரமாய் விசனங்கள்.

அடுத்த மேசை அன்பருக்கோ
அடுக்கு பூரி கொடுத்திடவே
மிடுக்குக் குரலில் நானுமதையே
முன்மொழிந்து பசியார்ந்தேன்.

வாழ்க்கையிலும் குறிக்கோளில்
ஆழ்ந்த பல ஐயங்கள்
ஏழ்மை நிறைந்த எண்ணங்கள்
தாழ்ந்த மனத் திண்ணங்கள்.

மாற்றானை  மறந்து நான்
ஏற்றம் காணுவ தெப்போது?
தனக்கென ஒரு குறிக்கோள்
தேர்ந்தடுப்ப தெப்போது?
❤D









No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...