Saturday, September 28, 2019

அடுக்காது


அடுக்காது , நான்
புன்வுறுவல்
புரிய முனைவது.

அப்புன்னகையில்
சோகத்தை
மறைக்க
முயல்வது.

வீட்டு மாடியில்
விளக்கேற்றி
வைத்துவிட்டு

காற்றிற்கு
தூது விட்டு
அழைப்பது .

வெற்றுச் சுவரில்
கண்ணை மட்டும்
கீறி விட்டு  

புதிய முகமொன்றைப் 
படைக்கப்
போராடுவது.

பாலையில்
பயணிக்க
முடிவுசெய்து, பின்

கானலில்
தாகத்தை
தீர்க்க முயலுவது.
  






  

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...