Sunday, May 17, 2020

தூக்கம்

தூக்கம்
======

கண்ணிமைகள் மூடிடும் நேரம்
கனவுலகம் முழித்திடும் நேரம்.

தான் என்கிற அகந்தையோ
தன்னடங்கிப் போகும் நேரம்.

கவலைகள் எல்லாம் எங்கேயோ
காணாமல் போகும் நேரம்.

எட்டாக் கனிகளையும் பறித்தபின்
எட்டு மணி நீள சமாதி நேரம்.

எங்கும் இருக்கும் பரமாத்மாவை
என்னுள்ளே உணர்த்திடும் நேரம்.

D

    

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...