Saturday, May 9, 2020

நிலவு

மூழ்கடலின் முடுக்குகளில் தினம்
முத்துக் குளிக்கும் முழு நிலவு .

முகிலின் வெண் பட்டுத் தூளியில்
அகிலம் மறந்து உறங்கும் நிலவு.

கடல்  நீரைக் கண்ணாடியாகிக்
காதலனைக் கண்டிடும் நிலவு.

மலையின் தோளில் தலை சாய்த்து
பலப் பல கனாக் காணும் நிலவு.

நினைவுகளின் நெரிசல்களிலும்
தனித்தே நடை பயிலும் நிலவு.

அது முகமா, இல்லை ஒளிப்பிழம்பா
ஆதவனின் நிழலன்றோ அரு நிலவு.

இரவின் மடியில் தலை வைத்து
இதமாக உறங்கும் என் நிலவு.

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...